ஓக. 16 - 20 வரை புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை

(Thinakaran)
தரம் 05 புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு அப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 16 நள்ளிரவு முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் வரையான காலப் பகுதியில் குறித்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது தொடர்பான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துதல், எதிர்பார்க்க வினாக்கள் உள்ளிட்டவற்றை அச்சிடல், விநியோகித்தல் போன்றவற்றிற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
அவ்வாறே, குறித்த விடயங்கள் தொடர்பான விளம்பரங்களை இலத்திரனியல், அச்சு மற்றும் இணையத்தளங்களில் பிரசுரித்தல், பதாதைகள், துண்டுப் பிரசுரம் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓக. 16 - 20 வரை புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை ஓக. 16 - 20 வரை புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை Reviewed by Lankastudents on 9:58:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.