(கட்டாயம் வாசியுங்கள்) பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களே !!! சிறு தவறால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.!!! #ugc #university

UNIVERSITY-ADMISSION-STUDENTS-ENTRANCE-UGC
(Kiruthikan Nadarajah)
பல்கலைக்கழக முதற் படிவம்
இந்த முறை வெளியிடப்பட்டுள
்ள வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் சிலருக்கு பாதகமான ஒரு தன்மை ஒன்று அவர்களின் கவனயீனத்தாலேயே நடந்தேறியுள்ளது.
முன்பெல்லாம் ஒரு பல்கலைக்கழகத்தில் சென்று குறிப்பிட்ட ஒரு பீடத்தில் பதிவு செய்த பின்னரேயே அந்த பீடத்திற்கு அவர் உரித்துடையவர் என்பது முடிவு செய்யப்படும். ஆக முதல் தடவையில் ஒரு பீடத்தில் பதிவு செய்தால், பின்னர் இரண்டாவது தடவையில் பெற்றுக் கொள்ளப்படும் பெறுபேறுகள் பிரயோசனம் அற்றுப் போய்விடும். இது தான் இவ்வளவு காலமும் நடைமுறையிலிருந்த விடயங்கள்.
ஆனால் குறிப்பிட்ட சிலரைத் தவிர இதில் பாதிக்கப்பட்ட நபர்களும் எண்ணளவில் குறைவு தான்.
ஆனால் இந்த முறை சில விசித்திர சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த முறை முதல் படிவத்தினை சரியாக நிரப்பாமல் பலர் தமது கற்கை நெறிகளை இழந்துள்ளனர்.
பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கு தகுதியான மாணவர்கள் சிலர் கூட சரியாக படிவத்தினை நிரப்பாமல் தமது சரியான எதிர்காலத்தைத் தொலைத்துள்ளனர்.
பொறியியல் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், தயவு செய்து இலங்கையிலுள்ள அனைத்து பொறியியல் அரச பல்கலைக்கழகங்களின் பெயர்களையும், அந்தப் படிவத்தில் சரியான இடத்தில் நிரப்புங்கள். அப்படி நிரப்பாமல் சிலர் பொறியியலை மறந்த கதைகளும் இந்த வருடத்தில் நடந்துள்ளன.
மேலும், பொறியியல் நிச்சயம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டு வேறு கற்கைகளை படிவத்தில் நிரப்பாமல் விடுகின்றனர். ஆக பொறியியல் கிடைக்காத விடத்து வேறு கற்கை நெறிகளும் கிடைக்காமலே போய் விடுகிறது. அப்படியாக பல்கலைக்கழகத்தைத் தொலைத்தவர்களும் உள்ளனர்.
ஆக அந்தப் படிவத்தில் உள்ள கற்கைகளுக்கான வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்பா விடினும், கொஞ்சமாவது நிரப்பி விடுங்கள். (முற்றாக நிரப்புதல் உத்தமம்) இல்லாவிடின் பல்கலைக்கழகமே போக முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
மேலே சொன்ன விடயங்கள் கணிதத்தோடு மட்டும் சம்பந்தம் என்று நினைத்துவிடாதீர்கள். இவ்வாறு தான் மற்றைய பிரிவுகளுக்கும் உண்டு என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தெரிந்த உதாரணத்தோடு அதனை முன்வைத்துள்ளேன்.
மேலும், ஆசிரியர் சொன்னார், வேறு யாரும் சொன்னார்கள் என்று பிழையாக முதற்படிவத்தை நிரப்பி விடாதீர்கள். அது தான் உங்களின் தலையெழுதாகவே மாறிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒன்று பல்கலைக்கழகத்தில் தற்பொழுது உள்ள மாணவர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள். அல்லது பல்கலைக்கழகத்தோடு சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளுங்கள்.
முன்பெல்லாம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோடு ஏதாவது கலந்தாலோசித்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறக்கூடிய வசதிகள் இருந்தன. இப்பொழுது அவர்களின் நடவடிக்கைகளும் இறுக்கமனாதகாவே இருக்கின்றன.
WAITING COURSESகளினைக் குறைப்பதற்காக அல்லது தவிர்பதற்காக இப்படியான நடவடிக்கைகளை UGC எடுத்துள்ளதாக நான் கருதுகிறேன்.
கஷ்டப்பட்டு படித்து, நல்ல பெறுபேறுகளைப் பெற்று, சந்தோசமாக இருக்குந் தருணங்களில், பிழையாக முதற்படிவங்களை நிரப்பி அநியாயமாக உங்களது எதிர்கால இலட்சியங்களைத் தொலைத்துவிடாதீர்கள்.
(கட்டாயம் வாசியுங்கள்) பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களே !!! சிறு தவறால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.!!! #ugc #university (கட்டாயம் வாசியுங்கள்) பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களே !!! சிறு தவறால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.!!! #ugc #university Reviewed by Lankastudents on 10:14:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.