யாழ் மருத்துவ பீட மாணவர்களால் SAITM மாலபே தனியார் மருத்துவ பீடத்திற்கு எதிராக கால வரையறையற்றபோராட்டம்
Mohamed Rikkaz -Jaffna univ.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் SAITM மாலபே தனியார் மருத்துவ பீடத்திற்கு எதிராக கால வரையறையற்ற பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்
>
> 16.01.2017 திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் SAITM தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இலங்கையிலுள்ள ஏழு மருத்துவ பீடங்களினதும் ஒன்றிணைப்புடன் நடைபெற்று வருகின்றது.
>
> இப் போராட்டத்தின் போது சமூகத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள மக்களிடம் நேரடியாக சென்று SAITM மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளை பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் மருத்துவபீட மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
>
> இப்பகிஷ்கரிப்பு போராட்டமானது பின்வரும் நான்கு கோரிக்கைளை முன்வைத்து மேற்கொள்ளப்படுகிறது.
>
> 1. நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
>
> 2. மருத்துவக்கல்வி , மருத்துவத்துறை மற்றும் நோயாளர் பராமரிப்புச் சேவை என்பவற்றின் தரத்தை உறுதிப்படுத்தவும் அவை சார்ந்த விடயங்களை கையாள்வதற்கும் இலங்கை மருத்துவ சபை(Srilanka Medical Council) மாத்திரம் எந்த வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
>
> 3. இதுவரை SAITM தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இலங்கை மருத்தவ சபையினால் (Srilanka Medical Council) சுயாதீனமாக அவர்களுக்கு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
>
> 4. SAITM தனியார் மருத்தவ கல்லூரி; மற்றும் நிவில் பெர்ணான்டோ வைத்தியசாலை முற்று முழுதாக அரசமயமாக்கப்படுவதுடன் இலங்கை மருத்தவ சபையினால் (Srilanka Medical Council) சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அரச மருத்துவ பீடமாக்கப்பட வேண்டும். என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Reviewed by Lankastudents
on
2:30:00 PM
Rating:
No comments: