பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு


2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் மே 21 தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 11ஆம் திகதி வரை அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source -thmlnnews

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு Reviewed by Lankastudents on 4:03:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.