சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு.-விளக்கக் கட்டுரை.


முஹம்மது ஸில்மி.

வைத்திய மாணவன்.

கிழக்கு பல்கலைக்கழகம்.

தற்போது நமது ஊரில் அதிகமாக பேசப்பட்டு வரும் விடயம்தான் சிறு நீரக செயலிழப்பு.

இது தொடர்பாக அனைவரும் தெளிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?
இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிறநீரகங்கள் (Kidney / ies) அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இனங்கள் எவை? விசேஷமானவை இரண்டு வகை.

சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு – இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு – இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு யாருக்கு வரக்கூடும்?

சிறு பராயம் முதல் முதிர் வயது வரை எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு

.
சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் என்ன?

சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும். இவற்றால் உலகில் 8 முதல் 10 சதவீதமான மக்கள் சிறுநீரக நோயால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

சிறுநீரக கல், சிறுநீரக குழாய் தொற்று (urinary Track infection) உயர் இரத்த அழுத்தம் (hypertensive nephrosclerosis) இதனை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு வரலாம்.
சிறுநீரக செயலிழப்பின் குறிகுணங்கள் :

மிக குறைந்த அளவின் சிறுநீர் வெளியேறுதல்

நுரைபோன்ற சிறுநீர் வெளியேறுதல்

சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்

சிறுநீரை வெளிபடுத்துவதில் சிரமம்.

கை, கால், முகம், வீங்குதல்

உடல் தொடர்ந்து சோர்வடைதல்

தோலில் சொறி மற்றும் அரிப்பு ஏற்படுதல்.

உணவின் சுவை அறிய இயலாமை

வாந்தி, குமட்டல், தலைவலி, தலைசுற்றல்,

மூச்சுத் திணறல்

கால் மற்றும் பக்கவாட்டு வலி ஆகியன காணப்படும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்படைந்துள்ள நோயாளிகளுக்கு கூழ்மப்பிரிப்பு (Dialysis) நிரந்தர தீர்வு அல்ல.
சிறுநீரக செயலிழப்பின் குறிகுணங்கள் :

1. இரத்த அழுத்தம் குறைதல் (Low blood pressure)

2. வாந்தி, பதட்டம் மற்றும் மயக்கம்

3. நாள்பட்ட நிலையில் (Dialysis) செய்த இடங்களில் சீழ்பிடித்தல் இவற்றின் மூலம் கிருமிகள் உடல் முழுமையும் பரவலாம், பின் சுரம் ஏற்படலாம்.

4. தசை பிடிப்பு ஏற்படலாம்

5. உடல் முழுமையும் அரிப்பு, தினவு ஏற்படலாம்

6. தூக்கமின்மை கை,கால் வலி, அதிகரித்து காணப்படலாம்.

7. இரத்த அழுத்தம் அதிகரித்தல் (Increased Blood Pressure)

8. வயிறு ஊதிக்காணுதல், குடலிறக்கம், உடல் எடை கூடுதல் ஆகிய பக்க விளைவுகள் காணப்படலாம்.
சிறுநீரக செயலிழப்பபை எப்படி உறுதிப்படுத்துவது?

யூரியா (Blood urea) சீரம் கிறியற்றினின் (Serum creatinine) என்பவற்றைப் பரிசோதித்து சிறுநீரக செயலிழப்பை உறுதிப்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பில் யூரியாவும், சீரம் கிறியற்றினினும் கூடுகின்றன. 24 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக சிறுநீரைச் சேர்த்து அதிலே கிறியற்ரினி்ன் கிளியறன்ஸ்(Creatinine clearance) பரிசோதனையை நடத்தினால், அது சிறுநீரகச் செயலிழப்பு என்பதை வைத்தியர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள உதவும். சிறுநீரகச் செயலிழப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இப்பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாக இருப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள , அல்றா சவுண்ட் ஸ்கான் (Ultra sound scan) னும் வைத்தியருக்கு உதவுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் எவை?

1. உணவு தரப்படுத்தல்./ மாற்றல்.

2. மருந்துச் சிகிச்சை(Druy therapy)

3. டயலைசிஸ் (Dialysis)

4. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை.
உணவு மாற்றம் – உணவிலே புரதச்சத்து, பொட்டாசியம், உப்பு நீர் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவது சாதாரண வழக்கம். புரதச்சத்து அடங்கியுள்ள இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை நாள் வீதம் ஒரு அளவிற்குக் குறைக்க வேண்டும். இளநீர் பழவகைகள், பொரித்த உருழைக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் இருப்பதால் இவை தவிர்க்கப்பட வேண்டும். கூடுதலான இரத்த அமுக்கம், உடல் வீக்கம், மூச்சு விடக் கஸ்டம் இவை இருந்தால் உப்பு குறைக்கப்பட வேண்டும். பாவிக்க கூடிய தண்ணீரின் அளவை உமது வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
மருந்துச் சிகிச்சை(Drug therapy) – நோயாளியின் சிறுநீர் செயலிழப்பு நிலையைப் பொறுத்து பல வித மருந்துகள் தேவைப்படும்…  உடலின் வீக்கத்தைக்குறைக்க – டையூறற்ரிக்ஸ் (Diuretics) (உ+ம்வ்றுஸெமைட் (frusemide) இரத்த அமுக்கத்தைக் குறைக்க – அன்றிஹைபரென்சிவ்ஸ் (Antihypertensives) (உ+ம்: மீதைல்டோபா methyilopa) வாந்தி சத்தியைக் குறைக்க –அன்ரிஎமெற்றிக்ஸ் (Antiemetics) உ+ம் மெற்ரோகுளோபிறமைட் (Metoclopramide) இரத்தக் குறைவுக்கு –இரத்தம் ஏற்றல், எரித்திரோபொயிற்ரின், இது விலை கூடிய மருந்து. சிறுநீர்த் தொற்றைப் பராமரிக்க—அன்றிபையொற்றிக் (உ+ம் :அமொக்சிலின்)
டயலைஸிஸ் – சிறுநீரகச் செயலிழப்பில் மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் யூரியா, பொட்டாசியம் எனும் உப்புக்கள் ஆபத்தான நிலைக்கு கூடிவிடும். இந்நிலையில் நோயாளி மரிக்கவும் கூடும். உடலிலுள்ள அழுக்குகளாகிய யூரியா, பொட்டாசியம் என்பவற்றை வெளியேற்றும் முறையே டையலைசிஸ் எனப்படுகிறது. டையலைசிஸ் பற்றிய தலையங்கம் வேறோர் துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை -எதுவித மாற்றமும் எற்படாத நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு திரும்பத் திரும்ப டையலைசிஸ் சிகிச்சை அளித்தல் , ஆபத்தானதும் செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோயாளருக்கு சிறுநீரகம் மாற்றம் செய்வது நல்லது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சுகதேகி ஒருவரின் (இருப்பவரோ,இறந்தவரோ) சிறுநீரகம் நோயாளிக்கு மாற்றப்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியுமா?

ஆம்.

ஒரு அளவிற்கு. இந்நோய் வர காரணமாக இருக்கும் பாம்புக்கடியை தவிர்ப்பதும். நீரிழிவிற்கு நேரத்தோடு சிகிச்சை பெறுவதும், கூடிய இரத்த அமுக்கம் வராது தடுப்பதும், சிறுநீரக அழர்ச்சி ஏற்படாது பார்ப்பதும், புரஸ்ரேட் பிரச்சினையை தவிர்ப்பதும், சிறுநீரக தொற்று ஏற்படாது பார்ப்பதும் இந்நோயை தடுக்கக் கூடிய வழிகளாகும் .அனேக நோயாளிகள் போதிய பராமரிப்பபை பெறுவதில்லை. வைத்தியரின் உதவியையும் இடைநிறுத்தி விடுகின்றனர். சிறுநீரில் காணப்படும் அசாதாரண நிலை குறித்து (உ+ம்:அல்பியுமின், செங்கலங்கள் க சிந்தித்து நோயை இனம் கண்டு அதை குணப்படுத்த நடவடிக்ககை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு முதிர்ச்சியடைததாய் இருந்தால் அதை தடுப்பது முடியாத காரியமாகும்.
தகவல் மூலம் - மருத்துவ புத்தகங்கள் மற்றும் தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகள்.

சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு.-விளக்கக் கட்டுரை. சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு.-விளக்கக் கட்டுரை. Reviewed by Lankastudents on 2:36:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.