அரசியல் ஒரு கடல் பயணம்
தேர்தலில் போட்டியிடும் போது ஒரு பேச்சு,
போட்டியிடாவிட்டால் இன்னொரு பேச்சு,
வெற்றி பெற்றால் ஒரு பேச்சு,
வெற்றி பெறாவிட்டால் வேறொரு பேச்சு,
பதவி கிடைத்தால் ஒரு பேச்சு,
பதவி கிடைக்காவிட்டால் இன்னொரு பேச்சு.
இதுதான் அரசியல்வாதிகளின் வாழ்க்கை. அவர்கள் எப்படியும் வாழ்ந்து விடுவார்கள்.
வல்ல இறைவனை அஞ்சக்கூடியவர்களை தெரிவு செய்வது நமது கடமை - பர்ளு கிபாயா.
தனி மனித ஆளுமையையோ, கட்சி சார்ந்த ஆதரித்து நாம் ஏமாறக் கூடாது.
.
அவர்களின் அடிமைகளாகவோ, வக்காலத்து வாங்குபவர்களாகவோ, அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிப்பவர்களாகவோ இருக்கக் கூடாது.
மாறாக ,அரசியல்வாதிகளை நாம் ஆள வேண்டும், அவர்கள் நம்மிடம் ஆலோசனை கேட்க வேண்டும். மக்களின் சேவகனாக மாற வேண்டும்.
அரசியல் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றோ ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றோ அல்ல.
அது வாழ்க்கை பயணத்தில் இன்றியமையாத
ஒரு கடலை போன்றது. சிலர் மாலுமிகளாக, பலர் பயணிகளாக.
தூரத்தில் நின்று ஓய்வெடுக்க முடியாது. அருகில் சென்று மாலுமிகளை அவதானியுங்கள், வழிகாட்டுங்கள்.
முஹம்மது ஸில்மி.
இறுதியாண்டு வைத்திய மாணவன்-மட்டக்களப்பு வைத்தியசாலை.
2020.08.15
அரசியல் ஒரு கடல் பயணம்
Reviewed by Lankastudents
on
8:57:00 PM
Rating:
No comments: