சேனைக்குடியிருப்பு (PMCU) வைத்தியசாலையில் தொற்றா நோய் (NCD) கிளினிக் ஆரம்பம்
#சேனைக்குடியிருப்பு (PMCU) #வைத்தியசாலையில் #தொற்றா #நோய் #கிளினிக் #ஆரம்பம்
(RIYAS ATHAM)
சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு (PMCU) வைத்தியசாலையில் தொற்றா நோய் (NCD) கிளினிக் மற்றும் அதற்கான பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பிரிவுத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த கிளினிக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தொற்றா நோய் கிளினிக் மற்றும் அதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருவதுடன் வெளிநோயாளர் பிரிவிலும் தினமும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டொக்டர் எம்.பி.எம்.சில்மி குறித்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் NCD கிளினிக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் தற்போது அவ்வைத்தியசாலை பல்வேறு வழிகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சேனைக்குடியிருப்பு (PMCU) வைத்தியசாலையில் தொற்றா நோய் (NCD) கிளினிக் ஆரம்பம்
Reviewed by Lankastudents
on
12:42:00 AM
Rating:
Reviewed by Lankastudents
on
12:42:00 AM
Rating:


No comments: