நல வாழ்விற்கான சிறந்த உள ஆரோக்கியம் 

Dr M.B.MOHAMED SILMY,

MOIC - PMCU CHENAIKUDIRUPPU




 ஆரோக்கியமான வாழ்வின் முக்கியமான ஒரு அங்கமாக ஆரோக்கியம் இருப்பதுடன் ஒருவரின் உடல் ஆரோக்கியத்திலும் இது நேரடியாகச் செல்வாக்குச் செலுத்துகின்றது. பல்வேறு காரணங்களின் நிமிர்த்தம் பெரும்பாலான சிறுவர்களும், பதின்மவயதினரும் உளவியல் தாக்கங்களிற்கு உள்ளாகுகின்றார்கள் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். 


 சிறுவர்களிலும், பதின்மவயதினரிலும் உளவியல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்.

வளரும் பருவத்தில் சிறுவர்களிலும், பதின்மவயதினரிலும் ஏற்படுகின்ற உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள். 

போதுமான தூக்கமின்மை. 

தொலைக்காட்சி, கணனி என்பவற்றுடன் அதிக நேரத்தைச் செலவழித்தல் 

கல்வி மற்றும் பரீட்சைகளில் முகங்கொடுக்கின்ற சவால்கள். விளையாடுவதற்கும். 

சுறுசுறுப்பாக இருப்பதற்கும் போதிய நேரமின்மை 

அடிக்கடி இரைச்சல் மிகுந்த ஒலிகளைச் செவிமடுத்தல் தாம் வாழும் சூழலில் எதிர்கொள்கின்ற முரண்பாடுகளும், 

துஷ்பிரயோகங்களும் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் ஏற்படும் சண்டைகள் 

புகைத்தல், மதுபானப் பாவனை, போதைவஸ்துப் பாவனை மற்றும் முறையற்ற பாலியல் தொடர்புகளில் ஈடுபடுதல். 



உளவியல் தாக்கமானது மனஅழுத்தத்தின் ஆணிவேராக இருப்பதுடன், ஒருவர் தனது வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைவதற்கும் தடையாக உள்ளது. ஒருவர் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது அதன் ஒரு அடையாளமாக உடல் சார்ந்த அசௌகரியங்களை உணர முடியும்.


உளவியல் தாக்கத்தின் அறிகுறிகள் 

தலைவலி, கழுத்து மற்றும் தோள்மூட்டில் தசை நோவு 

எப்போதும் உடல்வலியைப் பற்றிக் கதைத்தல் 

பசியின்மை, வயிற்றில் எரிச்சல் இருத்தல். 

ஒழுங்கற்ற நித்திரை படிப்பில் கவனம் சிதறுதல் அல்லது பின்னடைதல் பொழுதுபோக்கு, விளையாட்டுகளில் நாட்டம் குறைதல். 

உடல் பலவீனமாக உணர்தல், விரைவாகக் களைப்படைதல்.

 நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுதல். 

வீடு மற்றும் சமுதாயத்தில் மற்றயவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படுதல். 

இலகுவில் கோபம் கொள்வதனால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்தித்தல் 



மனப்பதற்றத்தைத் நடவடிக்கைகளில் மேற்கொள்வது ஏற்படுத்துகின்றது. தவிர்த்து மனதை ஆறுதற் படுத்தக்கூடிய ஈடுபட்டு, அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வது பலவகையான அனுகூலங்களை ஏற்படுத்துகிறது.


எமக்கு சிறந்த உளவியல் ஆரோக்கியத்தின் நன்மைகள் 


கிரகித்தல், ஞாபகசக்தி, புத்திகூர்மை போன்றன அதிகரித்தல் 

தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரம் போன்றவை விருத்தியடைதல். 

கல்விப் பெறுபேறுகள் சிறப்பாக இருத்தல். 

கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறையான குணங்களை நன்றாகக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருத்தல். வீடு, பாடசாலை மற்றும் சமுதாயத்தில் சிறந்த உறவைப் பேண முடிதல். விளையாட்டு மற்றும் ஏனைய மேலதிக நடவடிக்கைகளில் வெற்றிகள் கிட்டுதல். 

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் அடையும்


சிறந்த உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


இதற்குப் பல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும். அவற்றை நான்கு பிரதான பகுதிகளாக வகைப்படுத்தலாம். 

1. உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்த்தல். 

2. மனதிற்கு அமைதியைத் தருகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல். 

3. கலாச்சார மற்றும் சமய விழுமியங்களை வளர்த்துக் கொள்ளுதல். 

4. மனதை அமைதிப்படுத்துகின்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் 


நமது நாளாந்த வாழ்க்கையில் இதற்கான வழிமுறைகளை எவ்வாறு உருவாக்கிக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம். 


1. உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்த்தல் மேலே இல் குறிப்பிட்டுள்ள காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆறுதலான, சிறப்பான மனநிலையை அடையலாம்.


 2. மனதிற்கு அமைதியைத் தருகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் 

நேர்மறையான, உயர்ந்த மனப்பாங்கை விருத்தி செய்தல். ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு நகைச்சுவை மற்றும் களிப்பு போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ளல்.

 உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக இருத்தல். நேரத்தை எவ்வாறு செலவழிப்பது என்பதைத் திட்டமிடுதல். 

உங்களது அன்பிற்குப் பாத்திரமானவர்களுடன் போதியளவு நேரத்தை செலவிடுதல். 

நிம்மதியான, போதுமான தூக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல்., 


பொழுதுபோக்கிற்காக நாங்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் நமது மன அமைதியைப் பாதித்து. உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவையாவன: 

1. தொலைக்காட்சி பார்த்தல். 

2. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் அதிக நேரம் செலவழித்தல், 

3. அர்த்தமற்ற, இரைச்சல் மிகுந்த பாடல்களைச் செவிமடுத்தல். 

4. பொருத்தமற்றவர்களுடன் எமது நேரத்தைச் செலவழித்தல். 

5. புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய அடிமையாக்கக்கூடிய மருந்துகளைப் பாவித்தல். 


நித்திரை 

நமது மனதை இலேசாக்கி, சாந்தப்படுத்துவதற்கு போதுமானளவு நித்திரை அவசியமாகும். அதிக நேரம் கல்வி கற்றலில் ஈடுபடும் மாணவர்களது ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர்வதற்கு நல்ல நித்திரையும் இன்றியமையாதது ஆகும். உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும், தினமும் உடல் மற்றும் மனதிற்கு ஏற்பட்ட சேதங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நித்திரை உதவுகின்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணைப்படி, பாடசாலை செல்லும் வயதுடைய ஒரு பிள்ளை ஆகக்குறைந்தது 7 மணித்தியாலங்களும், வளர்ந்தோர் ஆகக்குறைந்தது 6 மணித்தியாலங்களும் தினமும் நித்திரை கொள்ள வேண்டும்.


போதுமான நித்திரை இல்லாதபோது உடனடி விளைவுகளாக தலைவலி, உடல் பலனற்று இருத்தல் போன்றனவும், காலப்போக்கில் இதயநோய்கள், நீரிழிவு, உடற்பருமன், உளவியல் பிரச்சினைகள் போன்றனவும் ஏற்படுகின்றன.


Reviewed by Lankastudents on 12:40:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.