நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது அப்படி என்றால் SAITM நாட்டுக்கு நல்லது தானே?

Stand_against_SAITM
DR.HALITH BUHARY

நீதிமன்றம் தடை இல்லை என தீர்ப்பு வழங்கிவிட்டது அப்படிஎன்றால் SAITM
நாட்டுக்கு நல்லது தானே?
உங்களது உலக அறிவை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
நீதிமன்றம்…உலகில் மிகக்கொடிய நோய்களை தோற்றுவிக்கும் புகைத்தலை தடை செய்யவில்லை , சாரயத்தை தடைசெய்யவில்லை , சில இடங்களில் கஞ்சாவைக்கூட அங்கீகரித்திருக்குறது .
இதையும் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கலாமே.
பல பெரிய கொடுமைகள் செய்த அயோக்கியர்களும் நீதிமன்றங்களால் அப்பாவிகள் என அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், அதே போல மிகவும் சிறந்த அகிம்சாவாதிகள் கூட தண்டனை பெற்றிருக்கிறார்கள்.
உண்மை-நீதியால் சில விடயங்களை கிழிக்கவும் முடியாது.
#####################
#SAITM ஐ முற்றாக தடை செய்வதென்றால், வெளி நாடுகளில் படித்து வந்து இங்கு மெடிக்கல் கவுன்சில் பரீட்சை எழுதுவோருக்கும் இங்கேயே படித்து விட்டு இங்கேயே பரீட்சை எழுதுவோருக்கும் என்ன வித்தியாசம்?
நல்ல விடயம்...
வெளிநாடுகளில் சிறந்த வைத்தியசாலைகளைக்கொண்ட , மருத்தவக்கல்லூரிகளை மாத்திரமே மெடிக்கல் கவுன்சில் அங்கீகரித்திருக்கின்றது.
அவ்வாறு இல்லாத மருத்துவக்கல்லூரிகளில் படித்துவிட்டு வந்தால் அங்கீகரிக்காது அவ்வாறு அங்கீகரிக்காத கல்லூரிகளில் அவை அங்கீகரிக்கப்பட வில்லை எனத்தெரிந்து கொண்டு அங்கே படிக்கப்போபவர்களை நானும் நீங்களும் எவ்வாறு அழைப்பது அவர்கலை நட்டுக்கழண்டவர்கள் எனத்தான் சொல்லுவேன்.
SAITAM அந்தவகையில் தான் அங்கீகரிக்கப்பட வில்லை, தரம் இருந்திருந்தால் அங்கீகரிப்பார்கள் இலங்கை மருத்துவகவுன்சிலினர்.
அரச வைத்தியர் சங்கமும் , மெடிக்கல் கவுன்சிலும் வெவ்வேறு துருவங்கள்,,
மெடிக்கல் கவுன்சில் அரச வைத்தியர்களின் எந்த ஒரு கதையையும் கேற்காது தனியே செயற்படும் ஒரு அமைப்பு , அது தடைசெய்வது அங்கீகரிப்பது என்பது தரத்தை கொண்டு மட்டுமே ( ஒரு உண்மை அரச மருத்துவர் சங்கம் –GMOA ,மெடிக்கல் கவுன்சிலும் ஒருவருக்கொருவர் ஆகாத நிலையில் தான் இருக்கின்றனர்)
மருத்துவ கவுன்சில் SAITM தொடங்கும் போதே சொல்லி விட்டது உமது ஹொஸ்பிட்டலை தரப்படுத்திக்கொள்ளுங்கள் , நாங்கள் அங்கீகரிப்போம் என்று அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டு தற்போது குரைக்கிறார்கள்,
நீங்கள் என்ன செய்தாலும் அங்கீகரிக்கமாட்டோம் என சொல்லவும் இல்லை , சொல்லவும் முடியாது.
###########
##வெளி நாட்டு பட்டங்களை இவ்வளவு காலமும் ஆதரிக்கும் நாம். நம் நாட்டு பட்டங்களையும் கல்லூரிகளையும் ஏன் எதிர்க்க வேண்டும்? உலகில் ஏனைய நாடுகளை விட கல்வித்தரத்தில் நாமும் நம் நாடும் முன்னேறியதல்லவா?
ஆம் ,
எதிர்க்ககூடாது.
வெளி நாட்டு கல்லூரிகளைப்போலாவது SAITM வைத்தியசாலை சிறப்பாக இருந்தால் அதில் பயிற்சி முடித்தால் நாம் ஏன் அவர்களை இங்கே வேலை செய்ய அணுமதிக்க முடியாது, முடியும்
################
#குறைந்த சித்தியுடனோ அல்லது அல்லது அரச பல்கலைக் கழகங்களுக்கு தகுதி பெறாமல் படித்தால் என்ன? இறுதியில் அவர்களதும் அரச வைத்தியர்களும் ஒரே பரீட்சையின் கீழ் தானே தோற்றி சித்தி பெற இருக்கிறீர்கள்..! அவர்கள் திறனற்றவர்கள் என்றால் அதில் தோல்வியுற்று அவர்கள் தகுதி இழப்பார்கள் தானே? எனவே இறுதியில் திறமை உள்ளவர்கள் மட்டுமே வைத்தியர் ஆவார்கள் ?
உண்மையில் இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
ஒவ்வொருவரின் அறிவும் வயதிற்கேற்ப , நேரத்திற்கேற்ப மாரும் !
உண்மையில் வெளிநாடுகளில் படிக்கச்செல்லும் இலங்கை மாணவர்கள் இலங்கையில் மருத்துவம் படிக்கும் மாணவர்களைவிட AL இல் குறைந்த சித்தி பெறுபவர்கள் , ஆனால் அங்கு சென்று படித்து விட்டுத்திரும்பி வரும் சில மருத்துவர்கள் இலங்கையில் சிறப்பான வைத்தியராக காணப்படுகின்றார்கள்.
உங்களது கேள்விக்கு வருகிறேன் ஒருவர் முதலாவது , இரண்டாவது , மூன்றாவது படி நிலைகளைத்தாண்டவில்லை (கட்டாயமானவை அல்லது போலியாக ஏமாற்றி தாண்டியிருக்கிறார் அவரை ) இருதி நிலைக்கும் , அவ்வாறான அணைத்தையும் சரியாக தாண்டியவருடன் போட்டி போட்டு தாண்டிவிட்டால் சரி யென சொல்லுகிறீர்கள்.
1- மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத மருத்துவ பல்கலைக்கழகம்
2- நோயாளிகள் மிகச்சொற்பமான தரமற்ற வைத்திய சாலை இதனால் தரமற்ற கிளினிகல் போதிய மருத்துவப்பயிற்சி இன்மை.
3- மோசடி இல்லாத உண்மைத்தன்மை
இம்மூன்ரு படிகளையும் செய்யாமல் நாண்காவது படி பொதுப்பரீட்சைக்கு போகமுடியும் என சொல்கின்றீர்களே.
ஒருவர் 2ம் ஆண்டு பெயில் (ஆனால் எவ்வாறோ நீங்கள் பாசாக்கி விட்டீர்கள்) , 3ம் ஆண்டு பெயில் (ஆனால் நீங்களே பாஸ் என அறிவித்துக்கொண்டீர்கள்) , 4ம் ஆண்டு பெயில் (ஆனால் நீங்களே பாஸ் என அறிவித்துக்கொண்டீர்கள்) அரசு, சொல்லசொல்ல கேற்காமல் போலியாக நடந்துகொண்டீர்கள், நான் எனது வீட்டில் வைத்து படிப்பித்தேன் , அவர்களும் பாசாகி விட்டார்கள் நீங்கள் எனது பிள்ளைகளைகளை 5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் எழுத விட வேண்டும் எங்கிறீர்கல் ஆனால் இவ்வாறு கூட ஏற்றுக்கொள்ளலாம் ,பாஸ் ஆகி போவது ஒன்றும் ஸ்கூலுக்கு அல்ல , செய்யப்போவது ஒன்னும் பப்படம் இல்லை ஒப்ரேசன் , உங்களது தாய் தந்தைகள் தான் பாவம்.
ஒரு வைத்தியர் மாத்திரம் ஈ . டீ யு (ETU) வில் இருக்கும் போது ஒரு வேன் அடிபட்டு நாளு பேரை ஒரே நேரத்தில் குற்றுயிரும் குறைஉயிருமாய் கொண்டு வரும் போது அங்கே இவ்வாறு பொறுத்தமான மருத்துவப்பயிற்சி இன்றி வந்த ஒரு வைத்தியர் அழுது கொள்வதை தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்.
ஒகே நீங்கள் சொல்வதைச்செய்வோம் SAITM அங்கீகரிப்போம் என்று வைத்துகொள்வோம் (உண்மையில் நீங்கள் சொல்வதுதான் நடக்கும்..கடைசியில் நாங்கள் என்ன எதிர்த்தாலும் அது அங்கீகரிக்கப்படும் ...அது வேறுகதை)
மூன்று முறையிலும்,மூண்று பாடத்திலும் மூனு சீ கூட எடுக்க இயலாதவன் உங்களது தாயின் , தந்தையுன் தலையை வெட்டி மூளைக்குளாய்களை சரியாக செப்பனிட்டு விடுவான், உங்களது மனைவியின் வயிற்றை வெட்டி குழந்தையை சரியாக தந்துவிடுவான் என்கிறீர்களே உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் .
ஆனால் மற்றவர்கள் போல நாங்கள் ஒதுங்கிக்கொள்ள மாட்டோம் , மனதால் சரி இதுக்கெதிராக போராடுவோம்..
######################
#கேள்வி கேற்பவர்களே ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள்
11 ஆம் ஆண்டு புத்தகத்தில் கேள்வி கேற்கிறீர்கள் என்றால் அதை படித்திருக்க வேண்டும் , அல்லது அதை வாசித்திருக்க வேண்டும், நீங்கள் 7ம் ஆண்டில் இருந்துகொண்டு 8ம் 9ம் 10ம் ஆண்டுகளை படிக்காமல் சும்மா கண்டது கேட்டதையெல்லாம் கேள்வி கேட்டால் (எவ்வாறு சின்னப்புள்ளத்தனமான கேள்வியாக இருக்கும் ) எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது உங்களது கேள்விகள்.
அடுத்து அதை உங்களுக்கு விளங்கப்படுத்துவது என்பது கடினம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
குறைந்தது வெளிநாட்டின் 11ம் ஆண்டு புத்தகத்தையாவது படித்துவிட்டு கேள்வியை க்கேளுங்கள்.
###############
#வெளிநாடுகளில் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன அவற்றை குறித்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்கின்றன ?
ஆம் சோமாலியாவிலும் மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன
 சோமாலியா அரசு ஏற்றுக்கொண்டு அவர்களை தமது நாட்டில் வைத்தியராக ஏற்றுக்கொண்டுள்ளது ஆனால் அதற்காக வேறு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை , ஏற்றுக்கொள்வதுமில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறித்த மெடிக்கல் கவுன்சில் இருக்கிறது அவர்கள் அங்கீகரிக்காவிட்டால் நீங்கள் அந்த நாட்டில் வைத்தியராக வேலை செய்ய முடியாது. அவர்கள் அங்கீகரிப்பது உமது மருத்துவகல்லூரியின் வைத்தியசாலையிலும் ,அதன் தரத்திலுமே அனேகமாக தங்கி யிருக்கிறது.
அதே போல் இலங்கை மெடிக்கல் கவுன்சிலும் எல்லா வெளிநாட்டு டொக்டர்களையும் , டொக்டர்களாக ஏற்றுக்கொள்ளாது , அவ்வாறு ஏற்றுக்கொண்டவர்கலைத்தான் இலங்கையின் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான பரீட்சைக்கு அங்கீகரிக்கும்.
எனேவே ஒரு பூரணமில்லாத மருத்துவக்கலூரியில் படித்து முடித்துவிட்டு வந்த அப்படியானவர்களை , அதில் என்ன பிழையிருக்கிறது அவர்களை நீங்கள் தோற்றும் கடைசிப்பரீட்சைக்கு தோற்றவையுங்கள் பாஸ் ஆகினால் அவர்களும் உங்களுடன் வேலை செய்யட்டும் எங்கிறீர்கள்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறு சொல்லும் மடையர்கள் இல்லை, எமது நாட்டில் மட்டுமே இருக்கிறார்கள்.
எனது நாட்டில் எனது தாய்க்கு ,தந்தைக்கு வைத்தியம் செய்பவன் தரமான வைத்தியக்கல்லூரியில் படித்திருக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள்..
நீங்கள் குறிப்பிட்ட அந்த நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியராக இருந்தாலும் அந்த அந்த நாட்டின் மெடிக்கல் கவுன்சில் பரீட்சை எழுதாமல் வைத்தியராக வேலை செய்ய முடியாது அவ்வாறுதான் தனது நாட்டு மக்களை ஒவ்வொரு நாடும் பாதுகாக்கிறது.
நான் என்ன ஒரு சிறந்த வைத்தியர் என்பதற்காகவும் இலங்கையை தவிர எந்த நாட்டிலும் போய் , வைத்தியராக வேலை செய்ய முடியாது அவர்களது எக்சாம் பாசாகாமல்.
இதை புரிந்து கொள்ளுங்கள்.
#இரண்டு வரியில்…
#கட்டாரில் டொக்டராக வேலை செய்ய…
1-கட்டாரினால் அங்கீகரிக்கப்பட்ட தரமான மருத்துவக்கல்லூரியில் நீங்கள் டொக்டராக பட்டம் பெற்றிருக்க வேண்டும்
இல்லாவிட்டால் நீங்கள் என்ன கொம்பன் டொக்டர் எண்டாலும் அங்கு டொக்டராக வேலைக்கு போடவே முடியாது
2-அப்படித்தான் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தான் படித்தாலும் அங்கே உள்ள மெடிக்கல் கவுன்சில் எக்சாம் எழுதி பாஸ் ஆகாமல் அங்கே அடப்புக்குள்ளும் எடுக்கமாட்டான் , அவண்ட புள்ளைகளுக்கு மருந்து குடுக்க.
இது எந்த ஒரு நாட்டிளும் கட்டாயம், தற்போது இலங்கையை தவிர
இந்த முதலாவது எங்கள் நாட்டுக்கு தேவையில்லை என்று சொல்கிறீர்கள் எனதருமை மக்களே …அதோகதிதான் எங்கள் நாட்டின் நிலை
###########
#நீங்கள் சொல்வது போல பொறுத்தமான வைத்தியக்கல்லூரியில் படித்தால் இலங்கை மெடிகல் கவுன்சில் ஏற்றுக்கொள்ளுமா?
ஆம்
இலங்கை மெடிகல் கவுன்சில் ஏற்றுக்கொள்ளும்.
SAITM இலங்கை மெடிகல் கவுன்சிலினால் ஏற்றுக்கொள்ளப்படும் பொருத்தமான வைத்தியசாலையில் படித்தால்.
ஏன் அவர்கள் லங்காவில், அல்லது நவலோக்கா,ஆசிரி போன்ற நோயாளிகள் அதிகம் வரும் ஹொஸ்பிட்டல் ஒன்றில் படித்தால் ஏற்றுக்கொள்ளும் .
ஏன் செய்யவில்லை செய்யாமல் விட்டு விட்டு வந்து நாட்டை குழப்புகிறார்கள்
##########
#உங்களது__ஹொஸ்பிட்டலைக்கொடுத்திருக்கலாமே__அவர்களும்__நமது__நாடு__தானே?
ஒகே குடுப்பம் .
இதச்சொல்லுர எல்லாரும் கேட்டுக்கங்க,
உங்கட வயல் , வளவு அரைவாசில என்ட புள்ளைகளும் விவசாயம் செய்யனும் அத தந்துடுங்க எண்ட புள்ளைகள் பாவம் , நானும் கோடீஸ்வரனாகனும் என்று கேட்டா
தருவீங்க எண்டா சொல்லுங்க
நான் சைட்டத்திற்கு ஹொஸ்பிட்டல் வழங்க போராடுறன்.
இப்படிக்கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க ...
நாங்களே வசதிகானது அதுக்குள்ள உங்களுக்கா!
அதைத்தான் அரச மருத்துவர் சங்கம் சொல்லுது.
அது ஒரு தொழிற்சங்கத்தின் கடமை
தொழிற்சங்கம் என்பது தனது சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உச்சகட்ட பயனை பெற்றுக்கொடுக்கும் ஒரு அமைப்பு .
அதில் அரச மருத்துவர் சங்கம் விதிவிலக்கன்று ( படிக்க ஒரு தொழிற்சங்கத்திற்குள்ள உரிமைகள் தொடர்பான அரச சுற்று நிருபம்)
##################
#எனதருமை மற்றய பல்கலைக்கழக மாணவர்களே உங்களது பெகல்ட்டி பில்டிங்க், லெக்சர் ஹோல் , லபொரட்டரி , எல்லாத்தையும் ஒருவர் புதிதா தொடங்கி உழைத்து கோடிஸ்வரனாகப்போகும் பிரைவட் இன்ஸ்டிட்யூட்டுக்கு சும்மா யாராவது கொடுக்கச்சொன்னால் கொடுப்பீர்களா?
##################
#இனி எவராவது என்னுடன் SAITM என்று கதைக்க வந்தால்…வருபவர் 3 விடயங்களை கொண்டுவரவேண்டும்.
1-அவரது ரிப்போர்ட் கார்ட்
2-அவரது வகுப்பில் முதலாம் ,இரண்டாம் , மூன்றாம் இடங்களைப்பெற்ற மாணவர்களின் நற்சான்றிதழ்
( அதாவது இவருக்கு சொல்லிக்கொடுத்தால் எதையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றலுடையவர் என்பது)
4- குறைந்தது மெடிக்கல் கவுன்சில் என்றால் என்ன , அரச மருத்துவர் சங்கம் என்றால் என்ன என்ற வித்தியாசத்துடன் , அர்சமருத்துவ சங்கம் பிரவேட் மெடிகல் கொலேஜ் வேண்டாம் எங்கிறதா அல்லது தரமற்ற மெடிகல் கொலேஜ் வேண்டாம் எங்கிறதா என்ற உண்மை.
வகுப்பில் இருக்கும் போது 18 தர 3 எத்தனை என்பதை கோடி தரம் சொல்லியும் விளங்காத சிலருக்கு , ஒரு கிலோ பஞ்சு பாரமா அல்லது ஒரு கிலோ இரும்பு பாரமா எனக்கேட்டால் எதுவெனத்தெரியாத அறிவாளிகளுக்கெள்ளாம் என்னால் விடைசெல்லி விளங்கப்படுத்த முடியாது , அந்தளவு அறிவாளியும் இல்லை நான்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது அப்படி என்றால் SAITM நாட்டுக்கு நல்லது தானே? நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது அப்படி என்றால் SAITM நாட்டுக்கு நல்லது தானே? Reviewed by Lankastudents on 2:30:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.