இலவசக் கல்வியின் தந்தையையே தோற்கடித்தவர்கள் நம்மவர்கள். SLMC & GMOA எல்லாம் எம்மாத்திரம் ?


From Dr. Sivachandran
அப்போது இலங்கை சுதந்திரம் அடையக்கூட இல்லை.
அப்போது இலங்கை வளர்ச்சியடைந்த நாடுமில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் படித்தால் மேட்டுக்குடியினருக்கு அடிமையாக இருக்கமாட்டான் என்பதால் படிப்பினை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகத்தான் வைத்திருந்தது அதிகார வர்க்கம்.
அந்த நிலையை மாற்ற ஒரே வழி..!
எல்லோருக்கும் இலவசக்கல்வி.
அற்புத திட்டத்தை முன்வைத்தார் கன்னங்கர.
கொதித்துப்போனது மேட்டுக்குடி வர்க்கம்.
கண்டனுக்கெல்லாம் கல்வி கொடுத்தால் நமக்கென்ன மரியாதை என்று கொதித்தது அதிகார வர்க்கம்.
கன்னங்கர மீது வசைபாடல்கள், கொலை மிரட்டல்கள்கூட வந்தது.
இலவசக்கல்விக்கு எதிராக ஆர்ப்பாட்டம்கூட நடந்தது.
அசரவில்லை கன்னங்கர. திட்டம் நிறைவேறியது.
திட்டம் மட்டும் போதுமானதாயிருக்கவில்லை.
மேட்டுக்குடியினர் கல்வியின் முக்கியத்துவத்தை அடித்தட்டு மக்களிடம் மறைத்தே வைத்திருந்ததால் யாருமே தங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்புவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
நகர்புறங்களில் மட்டும் இருந்த பாடசாலைகளை கிராமங்களிலும் ஆரம்பித்தார் கன்னங்கரா. இலவச பாடப்புத்தகம், இலவசச் சீருடையென பல இலவசங்களைக் கொடுத்தார். இருந்தும் பிள்ளைகளுக்கு ஆர்வம் வரவில்லை.
அதன்பின் பள்ளிக்கு வராத பிள்ளைகளை பாடசாலைக்கு வர வைக்கவும் முடியாதபோது பெற்றோர்கள் மீது வழக்குப்பதியவும் வரவு உத்தியோகத்தர் என்று ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இப்படிப்போராடித்தான் இப்போதிருக்கும் கல்வி நிலைமை உருவானது.
"இலங்கை போன்றதொரு பிச்சைக்கார நாடு எல்லோருக்கும் இலவசமாக கல்வி கொடுப்பது சாத்தியமா? " என்று அப்போது கன்னங்கர நினைத்திருந்தால் நான் உட்பட பல பேருக்கு கல்வி கனவாகக்கூட இருந்திருக்காது.
நினைத்துப்பாருங்கள்....!
1940 களில் எவ்வளவு எதிர்ப்பு வந்திருக்கும்? அப்படியிருந்தும்,
1940 களிலேயே எவ்வளவு முற்போக்காகச் சிந்தித்து இருக்கிறார் கன்ன‌ங்கரா?
இவ்வளவு செய்தும் அடுத்த தேர்தலில் நம் மக்களே அவர்களைத் தோற்கடித்தனர்.
இன்று 2017 யில் என்ன செய்கின்றீர்கள் ?
அபிவிருத்திய‌டைந்த நாடுகளில்கூட எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கமுடியாமல் இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் இலவசக்கல்வி கொடுக்க வேண்டும்? நாமும் உலகமயமாகி தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேன்டும் என்று சத்தமிடுகின்றீர்கள். நீங்கள் சொல்வதைக்கேட்காதவர்களை உலகமறியாதவர்கள், கிணற்றுத் தவளைகள் என்று கேலி செய்கின்றீர்கள்.
1940 யிலே எதுவுமே இல்லாத போது முதலாம் ஆண்டு தொடக்கம் டிக்கிரிவரை எல்லாமே புதிதாகத் தொடங்கப்பட்டு இலவசமாகக்கொடுக்கப்பட முடியும் என்றால், ஏன் 2017 இல் ஏற்கனவே நேர்த்தியாக நடந்துகொண்டிருக்கும் இந்த கல்வி முறையை கொஞ்சம் அப்டேட் பண்ணி இன்னும் சீராகக் கொடுக்க முடியாது?
எம்பி மாருக்கு ஒரேயடியாக ஒரு லட்சம் சம்பளம் அதிகரிக்க முடியுமென்றால்
அரசியல்வாதிகள் சேவை செய்ய அதியுயர் சக்திவாய்ந்து ஐந்தாறு கோடி பெறுமதியன சொகுசு வாகனம் வாங்கிக்கொடுக்க முடியுமென்றால்
ஏன் கல்வியை முற்றுமுழுதாக இலவசமாகக்கொடுக்க முடியாது?
முடியும்.
ஆனால் அதற்கு கார்பரேட் காரன் விடமாட்டான்.
கல்வியைப்போல லாபம் தரும் வியாபாரம் இல்லை. அதை முற்றுமுழுதாக அரசாங்கமே இலவசமாக் கொடுத்தால் கார்பரேட் உலகம் எப்படிப் பொறுத்துக்கொள்ளும்?
ஏற்கனவே சர்வதேச பாடசாலைகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் என எக்கச்சக்கமான காசுபறிக்கும் நிலையங்கள் உருவாகிவிட்டன.
மருத்துவக்கலூரிக்கான எதிர்ப்பு வடிவத்தில் தனியார் கல்விக்கான எதிர்ப்பு எழுப்பப்பட்டிருக்கின்றது. இதை அடிப்படையாக வைத்து அனைவரும் ஒன்று பட்டு ஒட்டுமொத்த தனியார் கல்விக்கும் எதிர்ப்புக்காட்ட முன் வர வேண்டும்.
இங்கிலாந்தும், அமெரிக்காவும் கல்வியைத் தனியார் மயப்படுத்தட்டும்.நாம் அவர்களை உதாரணம் காட்டி தனியார் மயப்படுத்துவதை விட்டுவிட்டு நம்மை அவர்கள் உதாரணம் காட்டும்படி சுயமாக செயற்படுவோம்.
நாட்டை முன்னேற்ற ஆயிரம் வழி இருக்கு.
கடந்த அரசாங்கத்தில்அரசியல்வாதிகள் செய்த பண மோசடி என்று பத்திரிகைகளில் வரும் பெறுமதிகளைக்கூட்டினால் வரும் தொகையே பல பல்கலைக்கழங்களைக்கட்டப்போதும்.
வெளிவந்த தொகைகள்தான் அவை. வெளிவராதவை?
நாட்டை முன்னேற்ற தனியார்க்கல்விக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஏன் இந்த ஊழல்கள் பற்றிப்பேசுவதில்லை.
எனக்கு ஆச்சரியமாக் இருக்கும் இன்னொரு விடயம், தனியார் கல்வி நிலையத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் அனைவரும் பெரிய பணக்காரர்களோ, மேட்டுக்குடியினரோ இல்லை.
சாதாரண அடித்தட்டு மக்களே கல்வியைத் தனியார் மயப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கின்றார்கள்.
பெப்ஸி கொக் குடித்தால்தான் உயர்வான் அந்தஸ்து கிடைக்கும் என்று பொய்யான மாயையை நம்பி வீட்டில் இருக்கும் இளநீரை அடிமாட்டு விலைக்கு விற்றுவரும் காசில் கோலா வாங்கிக்குடிக்கும் அடித்தட்டு வர்க்கம்தான் தங்களுக்கு இருக்கும் அற்புதமான இலவசக்கல்வியை தொலைத்துவிட்டு தனியார் கல்வியை உருவாக்க வேண்டும் என்று போராடுகின்றது. உண்மையில் அவர்களின் மனம் அவ்வாறு சலவை செய்யப்பட்டுள்ளது.
வெறுமனே மருத்துவமாணவர்களுடனான பிரச்சினை என்று திசை திருப்பி விட்டால் போதும் சமூகமே கிளர்ந்தெழும் என்று திட்டமிட்டு ஒரு சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.
நாளை தன் பிள்ளைகளை பணம் கட்டி படிப்பிக்க வைக்குமளவுக்கு வசதியுள்ளவன் தான் இலவசக்கல்வி பாதுகாக்கப்படவேண்டுமென்று போராடுகின்றான்.
ஏன் இந்தச் சமூக முரண்பாடு?
இலவசக்கல்வியை கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை தரமான கல்வியையாவது கொடுக்க முயற்சிக்கலாமே?
எடுத்ததுக்கெல்லாம் வெளிநாட்டின் பெயரைச் சொல்பவர்களே நீங்கள் சொல்லும் நாடுகளில் இந்த சைட்டம் முதலாளி செய்த வேலையை ஒருவன் செய்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருப்பான். இலங்கை என்ற படியால்தான் உங்களை முட்டாளாக்கிக அவனுக்கு சப்போர்ட் பண்ணும் அளவுக்கு வைத்திருக்கின்றான். அதைக்கூட சிந்திக்க முடியாத உங்களுக்கு விளங்கப்படுத்த நினைக்கும் மாணவர்களை நினைக்கத்தான் பாவமாக இருக்கின்றது.
இலவசக் கல்வியின் தந்தையையே தோற்கடித்தவர்கள் நம்மவர்கள். SLMC & GMOA எல்லாம் எம்மாத்திரம் ? இலவசக் கல்வியின் தந்தையையே தோற்கடித்தவர்கள் நம்மவர்கள். SLMC & GMOA எல்லாம் எம்மாத்திரம் ? Reviewed by Lankastudents on 1:44:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.