Open University Degree vs External Degree எது சிறந்தது??? Must read article



Open University Degree vs External Degree 
Which is better and more employment? 

உயர் கல்வி மூலம் Z score அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகம் நுழைய முடியாத மாணவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வெளிவாரி பட்டங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் நீங்கள் வசதிபடைத்தவராயின் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தனியார் நிறுவனங்களில் கல்வியை தொடரவும் முடியும்.

இப்பொழுது நாங்கள் இவ்வாறான பட்டங்களை வழங்கும் நிறுவனங்களில் காணக்கூடிய நிறைகளையும் , குறைகளை நோக்குவோம்.

OU degree என்பது Open University இனால் வழங்கப்படுவது ஆகும் ,மற்றும் External Degree ஆனது இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுவது ஆகும்.
சில பல்கலைக்கழகங்கள் இவ்வாறான external degree களை வழங்குகிறன.

✅ University of Sri Jayewardenepura Eg:- B.Sc Business Administration
✅University of Colombo Eg:- BIT offered by UCSC
✅University of Kelaniya
✅University of Peradeniya
✅University of Ruhuna
✅University of Moratuwa Eg:- BIT



Teaching and learning - OU vs External

Open University (OU) ஆனது மாணவர்களுக்கு தேவையான சகல lectures, practical classes,தேவையான study materials என்பவற்றை ஏற்படுத்தி தருகிறது. ஆயினும் OU இல் முழு நேர(Full Time) கற்கை நெறிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கின்றது. நீங்கள் தொழில் செய்பவராயின் முழு நேர வகுப்புகளில் கலந்து கொள்வது சிரமமான காரியமாகும்.

OU மாணவர்கள் Degree ஐ முடிப்பதற்கு அதிகம் சிரமமும் மற்றும் நேரமும் செலவழிக்கவேண்டியிருக்கும். அதேபோல் lectures களுக்கும் அதிக நேரம் செலவழிப்பதால் பணச்செலவும் அதிகம் இருக்கும்.

எவ்வாறாயினும் OU இல் பலதரப்பட்ட பட்டப்படிப்புகளை practicls , Field class உடன் தொடரலாம்.
Agricultural, Pharmacy, Nursing, Law,Education, Engineering etc...  போன்ற கற்கைகளை OU இல் தொடரமுடியும் மற்றும் இவற்றை External ஆக பெற முடியாது.

OU இலும் தேசிய பல்கலைக்கழகங்கள் போன்ற பரந்த பல்கலைக்கழக வாழ்க்கையை பெற்றுக்கொள்ளலாம்.
You can enjoy real campus life with your batch-mates and participate in various events and field trips organize by fellow undergraduates, and participate in Sports and extra-curricular activities of the OU.

External Degree

External Degree ஐ பொறுத்தவரை பல்கலைக்கழகமானது தேவையான செமினார்கள் மற்றும் study material என்பவற்றை பெற்றுத்தரக்கூடியது.ஆயினும் நீங்கள் tuition களில் மேலதிக அறிவுக்காக வகுப்புகள் செல்ல வேண்டியிருக்கும். 
Registration மற்றும் Examination fees போன்றவற்றிட்க்கும் tuition fees போன்றவற்றிட்கும் பணம் செலவழிக்கவேண்டியிருக்கும்.

பல Arts மற்றும் Management stream external degree களுக்கு Assignments போன்றவை இருப்பதில்லை. நீங்கள் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் degree ஐ பூர்த்தி செய்யலாம். இதனால் நீங்கள் ஏதும் தொழில் புரிபவராயினும் இது இடைஞ்சலாக இருக்காது.Tuition களும் வார இறுதி நாட்களிலேயே இடம்பெறும்.
இருப்பினும் சரியான காலத்தில் result களை வெளியிடல், தளர்வான முகாமைத்துவம் மற்றும் அதிக அளவில் மாணவர்களை சேர்த்தல் போன்றன external degree இல் பின்னடைவான விடயங்களாகும்.


Employability of Graduates

External Degree களில் தெளிவாக அது ஒரு external degree என்று குறிப்பிட்டிருக்கும். தொழில் தேடும்பொழுது உங்களை அவர்கள் Natiomal or OU or External  degree என்று இலகுவாக பிரித்து அறிந்து கொள்வார்கள்.

எவ்வாறாயினும் உங்களால் இந்த degree கொண்டு அரசாங்க வேலைகள்( சுங்க நிறுவனம்,Foreign Service , Civil service (SLAS) ) போன்றவற்றிட்க்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் எந்த டிக்ரீ ஐ பெற்றிருந்தாலும் அது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு அரசாங்க , தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பு என்பது உங்கள் திறமையும் தொழில் தகைமையிலுமே உள்ளது.
உங்களுக்கு அனுபவம் மற்றும் விஷேட திறமைகள் இருப்பின் உங்களால் OU or External டிக்ரீ ஐ கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.


Validity of Degree Certificates

OU or External டிக்ரீகளின் பெறுமதி ஏனைய அரசாங்க பல்கலைக்கழக டிக்ரீ போலவே  சமமாக கருதப்படும்.
உங்களால் அந்த டிக்ரீ களை கொண்டு M.Sc , MA,MBA,Mphil or Phd போன்ற மேற்படிப்புகளை தொடர்வும் முடியும்.

நன்றி.

ஒரு telegram group இருந்து post பண்ணியுள்ளேன்.


Open University Degree vs External Degree எது சிறந்தது??? Must read article Open University Degree vs External Degree எது சிறந்தது??? Must read article Reviewed by Lankastudents on 5:06:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.