பல்கலைக்கழகங்களை எதிர்வரும் வாரம் திறக்க நடவடிக்கை

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் வாரம் திறக்கப்படும் என, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பதில் துணை வேந்தர், சிரேக்ஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார். 

இதேவேளை, பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், எதிர்வரும் வாரமளவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் திருப்தி அடைந்தால், அவற்றை மீளத் திறப்பதற்காக 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் தான் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்களின் வளாகம் மிகப் பெரியது. ஆகையால், பல்கலைக்கழக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தியடைய நீண்டநாள் பிடிக்கும் என தெரிவித்தார். மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒரேநேரத்தில் திறக்க முடியா விட்டாலும், சில பீடங்களையாவது திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்தார். 

Thinakaran

பல்கலைக்கழகங்களை எதிர்வரும் வாரம் திறக்க நடவடிக்கை பல்கலைக்கழகங்களை எதிர்வரும் வாரம் திறக்க நடவடிக்கை Reviewed by Lankastudents on 10:16:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.