university க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரா நீங்க !!!! ப்ளீஸ்..... இதைக்கொஞ்சம் வாசித்துவிட்டுப்போங்கள் -
ப்ளீஸ்..... இதைக்கொஞ்சம் வாசித்துவிட்டுப்போங்கள்.
இலங்கையிலும் பேஸ்போல் (Baseball) விளையாடுகிறார்கள் என்பது எனக்கு யுனிவசிட்டி வந்த பிறகுதான் தெரியும்.
ஹாக்கி, ரோவிங், ரெஸ்லிங், கராத்தே, பழுத்தூக்குதல், எல்லே, புட்போல், கிரிக்கட், பெட்மின்டன், டேபிள்னெ்னிஸ், செஸ், கரம், ஸ்விம்மிங், கரப்பந்து, றக்பி, கூடைப்பந்து, ஸ்கரப்ல்ஸ், ஓடுதல், பாய்தல், எறிதல், இத்தியாதி இத்தியாதி என்று எல்லா விளையாட்டுக்களுக்கும் தனித்தனி குழுக்களும், அதற்கென்று விசேட பயிற்றுவிப்பாளர்களும் மைதானங்களும் உபகரணங்களும் இங்கே எங்கள் பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கிறது.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் ஸ்விம்மிங் பூல் கிடையாது. ஆனால் பக்கத்து பாடசாலை ஒன்றிலுள்ள ஒரு ஸ்விம்மங் பூலை இலட்சங்கள் கொடுத்து பாவணைக்கு எடுத்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் கேள்விப்பட்டிராத சங்கங்களையும் அமைப்புக்களையும் நான் இங்கு கேள்விப்படுகிறேன்.
Gavel Club, Nature Club, Entrepreneurship Club, Hiking Club, Leo Club, Rotract Club, Dancing Team, Music Team, ISEC, Mathematics Club, Media Club, E club, Tamil Literature association, Robotics Club என்று விரிந்துகிடக்கின்றன. பாடசாலைகளைப்போல் அல்லாது எல்லாமே துடிப்புடன் இயங்கும் சங்கங்கள்.
போதாக்குறைக்கு ஒவ்வொரு பீடங்களுக்கும் தனித்தனி மாணவர் சங்கம், ஒவ்வொரு Department இற்கும் தனித்தனி மாணவர் சங்கம், பலகலைக்கழக யூனியன், அவை ஒவ்வொன்றுக்கும் வருடாந்தம் செய்தேயாக வேண்டிய நிகழ்ச்சி நிரல்கள் என்று இருக்கின்றன.
இத்தனைக்கும் மேலாக ஆய்வுகளாலும், நூற்களாலும் நிரம்பி வழியும் நூலகம், எல்லையற்ற (unlimited) அதிவேக இணையம், முப்பத்தி ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு, இலவச தங்குமிடம், ஒரு Field visit போவதாக இருந்தால் வாகன வசதி, பயிற்சியாளருடன் கூடிய ஜிம், மாதாந்தம் மகாபொல, Bursary என்று எல்லா வசதிகளும் உண்டு.
மில்லியன் கணக்கான பெறுமதி கொண்ட உபகரணங்களுடன் Laboratory கள். அவற்றை பராமரிப்பதற்கான விஷேட ஆளணி என்று இருக்கிறது. எங்களது Environmental Lab இல் கடைசியாக கொள்வனவு செய்த இரண்டு தண்ணீர் டெஸ்ட் பண்ணும் மெசின்கள் ஒவ்வொன்றும் இரண்டு கோடி ரூபாய். மெகானிகல் production department இல் ஆறு கோடி ரூபாயுடைய மெசின் ஒன்றை அண்மையில் வாங்கி வந்திருந்தார்கள். இதுபோக ஒவ்வொரு undergraduate research உக்கும் தலா 25,000 ரூபா ஒவ்வொரு மாணவனுக்கும் ஒதுக்கி இருக்கிறார்கள்.
ஒரு நாள் Consultant Fee ஆக பல இலட்சங்கள் வாங்கும் ஒரு பேராசிரியருடன் இங்கே மணிக்கணக்கில் அமர்ந்து நாங்கள் உரையாட முடியும். அவரோடு பிரயாணம் செய்ய முடியும்.
படிப்பிற்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் இம்மியும் குறையாமல் விளையாட்டுக்கும் ஏனைய புறக்கீர்த்திய செயற்பாடுகளுக்கும் வழங்கப்படும்.
ஒருவன் ஒரு பரீட்சைக்கு வராமல் "மாமா செத்துவிட்டார் சேர்" என்று சொல்லும்போது ஒர lecturer கோபப்பட்டால் கூட " எனக்கு நேத்து match இருந்தது சேர்" என்று சொன்னால் கோபப்படவே மாட்டார். வருடா வருடம் விளையாட்டில் திறமை காட்டுபவர்களை Colours Awarding என்று வருடாந்தம் கௌரவிப்பார்கள். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நிகரான ஒரு நிகழ்வாக அது இருக்கும்.
இவற்றை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நான் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் வந்தபோது இதில் 5% விடயங்கள் கூட எனக்குத் தெரியாது.
"பேராதெனிய அக்பர் ஹோலில் விடிய விடிய லைட் பத்தும். அப்படி அங்கே மாணவர்கள் படிப்பார்கள். நீஙகளும் அப்படித்தான் படிக்க வேண்டும்" இதுதான் ஒரு ஆசிரியர் A/L படிக்கும்போது எனக்குச் சொல்லித்தந்தது. நானும் படிப்புமட்டும்தான் இங்கு எல்லாம் என்று வந்தேன். வந்துபார்த்தால் எனக்கு சொல்லித்தரப்பட்ட சகலதும் பொய்.
நான் மட்டுமல்ல, சோனக சமுகத்திலிருந்து வரும் "பெரும்பாலான" மாணவர்களின் நிலை இதுதான். ஒரு பல்கலைக்கழகத்தில் பிரகாசிப்பதற்கு அதை முழுமையாக அனுபவிப்பதற்கு A/L இல் எடுக்கும் 3A யோ அல்லது நல்ல றிசல்ட் மட்டுமோ போதாது.
இங்கே இருக்கின்ற வசதிகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தத்தக்க வகையில் மாணவர்கள் சிறுவயதில் இருந்தே பழக்கப்பட வேண்டும். படிப்பையும் விளையாட்டையும் ஏனைய புறக்கீர்த்திய செயற்பாடுகளையும் சமாந்தரமாக கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அது ஒன்றும் கல்லில் நார் உரிக்கும் வேலையல்ல. மிகவும் இலேசான விடயம்.
இங்கே வருகின்ற மற்ற மாணவர்களும் படித்துத்தான் வருகிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவிடயங்களிலும் அதிதிறமையோடு இருக்கிறார்கள். இலங்கையின் தேசிய உதைபந்தாட்ட அணியில் விளையாடும் ஒருமாணவன் பொறியியற் பீடத்துக்கு தெரிவாகி வருகிறான். ஆனால் என்னுடைய காலிலிருந்து o/l இற்கு ஆறுமாதத்திற்கு முன்னமே பந்து பறிக்கப்பட்டாகி விட்டது.
இதனால்த்தான் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸ் (AUMSA) இன்னும் உறங்கு நிலையில் கிடக்கிறது. எங்களின் பெரும்பாலான முஸ்லிம் மாணவர்கள் அதியுச்ச இலக்கு, எப்படியாவது செமஸ்டர் எக்ஸாம்ஸை பாஸ் பண்ணிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.
இவற்றை எல்லாம் எனக்கு சொல்லித்தர யாரும் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகளுக்கு கண்டிப்பாகச் சொல்வேன். அடுத்த சந்ததிக்காவது இந்த உண்மையை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை எங்களின் தோள்களில் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதற்காகத்தான் இந்த Program ஐ பரீட்சார்த்தமாக வடிவமைத்திருக்கிறோம்.
இலங்கையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தினால் பட்டத்தை தரமுடியும். ஆனால் ஒரு அரச பல்கலைக்கழககத்தில் குவிந்து கிடக்கும் வசதிகளையும், வாய்ப்புக்களையும், அது தருகின்ற அனுபவங்களையும் அடுத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு கூட தனியார் பல்கலைக்கழகத்தினால் தரமுடியுமா என்பது சநதேகம்தான்.
அரச பல்கலைக்கழகம்தான் மாணவரகளின் முதற்தெரிவாக இருக்க வேண்டும். அதை முழுமையாக அனுபவிக்கக் கூடிய வகையில் அவர்கள் வளர்க்கப்பட வேண்டும். கடைசித் தெரிவாகத்தான் தனியார் கல்வி அமைய வேண்டும். பல்கலைக்கழகம் படிப்பதற்குரிய இடமல்ல. அது வாழும் இடம் என்பதை எங்கள் மாணவர்களுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் சொல்வதற்கான ஒரு கன்னி முயற்சியாக இது அமையும் என்பதே எங்கள் நம்பிக்கையாகும்.
(Majlis ul Islam, University of Moratuwa has decided to organize programmes in schools for students of Grade 9 and 10 about the actual life of a student at the university. The content of the programmes are the huge number of resources and opportunities that university students are blessed with and the objective is to motivate students towards university education. If you wish for this programme to be held at your school, contact us if you are the principal/co-ordinator.
university க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரா நீங்க !!!! ப்ளீஸ்..... இதைக்கொஞ்சம் வாசித்துவிட்டுப்போங்கள் -
Reviewed by Lankastudents
on
10:20:00 PM
Rating:
No comments: