ஆரம்பமானது உயர் தர பரீட்சை 2017; விதி மீறினால் 5 வருட தடை
Rizwan Segu Mohideen
கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சைகள் இன்று (08) முற்பகல் 8.30 இற்கு ஆரம்பமாகிறது.
நாடெங்கிலுமுள்ள 2,230 பரீட்சை நிலையங்களில் 315,227 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மாணவர்கள் - 315,227
நிலையங்கள் - 2,230
விசேட தேவையுடையவர்கள் - 260
கண்காணிப்பாளர்கள் - 28,000
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 30 நிமிடங்கள் முன்பாக பரீட்சைக்கு தோற்ற வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சை அனுமதி அட்டை, ஆள் அடையாள அட்டை என்பவற்றை தம் வசம் வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்தில், கைடயக்க தொலைபேசிகள், இலத்திரனியல் மற்றும் ஸ்மார்ட் உபகரணங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அவ்வாறு மீறும் மாணவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்கு பரீட்சை தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த. உயர் தர பரீட்சைகளை முன்னிட்டு, கடந்த 02 ஆம் திகதி முதல், அது தொடர்பான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துதல், எதிர்பார்க்க வினாக்கள் உள்ளிட்டவற்றை அச்சிடல், விநியோகித்தல் போன்றவற்றிற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: