5 ஆம் தர மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் : மட்டுவில் சம்பவம்


Published by Vijithaa

மட்டக்களப்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரை ஆசிரியயொருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
பத்து வயதான ரவிசங்கர் துவாரகன் என்ற மாணவனே பாடசாலையில் வைத்து ஆசிரியரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டவராவார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த மாணவனின் தாய் ஆசிரியரிடம் கேட்டபோது,
' பொலிஸிடம் சென்று முறையிடுங்கள் அல்லது  உங்களால் முடிந்ததை செய்யுங்கள்" என பொறுப்பில்லாது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த ஆசிரியரை தெடர்பு கொண்டு நாம் கேட்ட போது,
எனக்கு தற்போது நேரமில்லை நாளை என்னை பாடசாலையில் வந்து சந்தியுங்கள் என்று உதாசீனமாக பதிலளித்து விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்.
இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகள் மட்டில் வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

5 ஆம் தர மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் : மட்டுவில் சம்பவம் 5 ஆம் தர மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் : மட்டுவில் சம்பவம் Reviewed by Lankastudents on 11:12:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.