புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத் தடுத்தலும். ( தொடர் -1 ) Early detection and primary prevention of cancer (part 1)








புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத் தடுத்தலும். 
தொடர் -1 
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

 . நமது வாழ்க்கையை ஆரோக்கியமானதாக அமைத்துக் கொள்ளுவதன் மூலமும் , நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுவதன் மூலமும் மூன்றில் ஒரு விதமான புற்றுநோய்கள் - வராமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும் . 
 1.புகைத்தலை முற்றாகத் தவிர்க்கவும் ( சுயமாகப் புகைத்தல் , மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தல் ) 
2.புகையிலை , வெற்றிலை மெல்லுதல் , பாக்கு , மற்றும் வணிக ரீதியான பாக்குத் தயாரிப்புப் பொருட்களை முற்றாகத் தவிர்க்கவும் , 
3.மதுபானத்தைத் தவிர்க்கவும் . 
4.சமச்சீரான உணவுப் பழக்கத்துடன் அதிகளவில் பழங்கள் , காய்கறிகள் மற்றும் பச்சைக் கீரை வகைகளை அதிகளவில் உட்கொள்ளுங்கள்  
5.உங்கள் உயரத்திற்கேற்ற எடையைப் பராமரிக்க முயலுங்கள் . 
6.பாதுகாப்பற்ற உடலுறவை முற்றாகத் தவிர்க்கவும் . 
7.தொடர்ச்சியாக உடற் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள் . 
8.மன இறுக்கத்தைக் குறைக்கும் வழிகளை கைக்கொள்ளுங்கள் . 
9.வாழும் சூழலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள் .  
10.வேலைத்தளத்தில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்களின் வெளிக்காட்டுதல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் . 
மற்றொரு மூன்றிலொரு வீதமான புற்றுநோய்கள் , ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் | வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடியும் . எனவே புற்றுநோய்கள் பற்றிய ஆபத்தான அறிகுறிகள் பற்றிய அறிவு , பொதுமக்களை விழிப்புடன் வைத்திருக்க உதவும் .
 புற்றுநோய் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் குணங்குறிகளுக்கு புற்றுநோய் மட்டுமே காரணம் இல்லை . 
காணப்படும் அறிகுறிகள் , குணங்குறிகளை மட்டும் மூலமாக வைத்துத்கொண்டு , ஏற்பட்டிருப்பது புற்றுநோய் என்கின்ற முடிவுக்கு வரமுடியாது . 
பூரணமான உடற்பரிசோதனை , சிறப்புப் பரிசோதனைகள் ( உதாரணமாக , மார்பகக் கதிர்ப் - பரிசோதனை . நுண் ஊசிமூலம் இழையவியல் பரிசோதனை , சந்தேகத்திற்கிடமான இடத்தில் இழையங்களை வெட்டியெடுத்துப் பரிசோதித்தல் , குழாய் ஒன்றை உள்நோக்கி செலுத்துவதன் மூலம் ஆய்வது போன்ற பல பரிசோதனைகள் , புற்றுநோயைக் கண்டறிய முன்னர் செய்ய வேண்டியுள்ளது . 
 சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் மற்றும் குணங்குறிகள் ஒருவரிடம் இருந்தால் , தாமதம் இல்லாமல் அந்நபரை ஒரு மருத்துவரிடம் அனுப்பிவைக்கவேண்டும் .
(தொடரும் - இன்ஷா அல்லாஹ்)



புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத் தடுத்தலும். ( தொடர் -1 ) Early detection and primary prevention of cancer (part 1) புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத் தடுத்தலும்.  ( தொடர் -1 ) Early detection and primary prevention of cancer (part 1) Reviewed by Lankastudents on 5:58:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.