பெண்களே மார்பகப் புற்றுநோய் பற்றி அவதானமாய் இருக்கின்றீர்களா?🛍 (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 3) Breast cancer (part 3)

பெண்களே மார்பகப் புற்றுநோய்  பற்றி அவதானமாய் இருக்கின்றீர்களா?🛍
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 3) Breast cancer (part 3)
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்


 மார்பகப் புற்றுநோயானது மிக ஆரம்ப நிலையிலே கண்டறியப்படுமாயின் சிறந்த ஆரம்ப சிகிச்சையளிப்பதன் மூலம் அதை முற்றிலும் குணப்படுத்த முடியும் ,
மார்பகப் புற்றுநோயை மிக ஆரம்ப நிலைகளில் கண்டறியும் வழிமுறைகள்
சுய மார்பகப் பரிசோதனை - ஒரு பெண் தன்னுடைய மார்பகங்களைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமும் கிரமமான முறையில் தொட்டுணரும் பரிசோதனை முறையானதும் , 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எல்லோராலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் .
பிணி ஆய்வு நிலைய மார்பகப் பரிசோதனை - பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களால் , மார்பகங்களைப் பரிசோதிக்கும் முறையாகும் . 20 - 40 வயதுக்குட்பட்ட பெண்களாயின் முன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் . 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களாயின் வருடத்தற்கு ஒரு முறையாவது மிணி ஆய்வு நிலைய மார்பகப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் .
மார்பகப் புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட பெண்கள்
கடந்த காலங்களில் மார்பகப் புற்றுநோய் அல்லது மார்பக நோய் பற்றிய வரலாறு கொண்ட பெண்கள் .
மார்பகப் புற்றுநோய் அல்லது கருப்பைப் புற்றுநோயை , குடும்ப வரலாறாகக் கொண்ட பெண்கள் .
 11வது வயதுக்கு முன்னரே பூப்பெய்திய பெண்களும் , 55 வயதுகளுக்குப் பின்னர் தாமதமாக மாதவிடாய்ச் சக்கரம் நின்ற பெண்கள் ,
 ( அதாவது அதிகளவு மாதவிடாய்ச் சக்கரங்களுக்கு உட்பட்ட பெண்கள் தாய்மைப் பேரடையாதவர்கள் ,
A15 வயதுக்குப் பின்னர் முதலாவது மழலையைப் பெற்றுக் கொண்டவர்கள் , குறைந்தளவு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் ,
தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டாதவர்கள் அல்லது சிறிது காலத்துக்கு மட்டும் தாய்ப் பாலூட்டியவர்கள் .
மாதவிடாய்ச் சக்கரம் நின்ற பின்னர் ஹார்மோன் மாற்றிட்டுச் சிகிச்சை அல்லது வாய்வழி உண்ணும் கருத்தடை மாத்திரைகளை 5 வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்திய பெண்கள் ,
விலங்குக் கொழுப்புரவுகளை அதிகளவில் நுகர்பவர்கள் ,
குறைவான அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் பெண்கள் .
மாதவிடாய்ச் சக்கரம் நின்ற பின்னர் குண்டான பெண்கள் அல்லது ஏற்கனவே உடற் பருமன் கூடிய பெண்கள் .
 குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது உடற்பயிற்சியே செய்யாதவர்கள் .
மது அருந்துபவர்கள் ,
அதிகளவில் புகைப்பவர்கள் அல்லது புகைப்பவர்களுக்கு அருகிலிருப்பவர்கள் .
கடந்த காலங்களில் கதிர் வீச்சுக்கு உட்பட்டவர்கள் ,








மருத்துவ அறிகுறிகள்
சமீபத்தில் அவதானிக்கப்பட்ட மார்பகச் சமச்சீரின்மை அல்லது மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் .
மார்பகங்களில் அவதானிக்க்கூடிய வீக்கம் அல்லது மார்பகத்தின் மேற் தோல் தடிப்படைந்து காணப்படல் ,
மார்பகங்களில் காணப்படும் உட்குழிவுகள் அல்லலு தோலுக்குக் கீழான கடினப்பகுதி .
மார்பகத்தின் தோலானது தோடம்பழத்தின் தோலினை ஒத்த தோற்றம் பெறல்
முலைக் காம்பின் தோற்றத்தில் மாற்றம் அல்லது முலைக் காம்பிலிருந்து திரவங்கள் வெளியேறல்
அக்குள் அல்லது கழுத்துப் பிரதேசங்களில் நிணநீர் முடிச்சுக்கள் வீங்கிக் காணப்படல் ,
மார்பகத்தின் ஒரு குறிப்படப்பட்ட இடத்தில் தொடர்ந்து காணப்படும் நோவு அல்லது வலி ,



(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 3)
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

பெண்களே மார்பகப் புற்றுநோய் பற்றி அவதானமாய் இருக்கின்றீர்களா?🛍 (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 3) Breast cancer (part 3) பெண்களே மார்பகப் புற்றுநோய்  பற்றி அவதானமாய் இருக்கின்றீர்களா?🛍  (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 3) Breast cancer (part 3) Reviewed by admin 3 on 11:38:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.