உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) Gastrointestinal tract cancer (part 2)

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)

முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்



01) . வாய்ப் புற்றுநோய் ORAL CANCER
 ஒவ்வொரு நபரும் சுய வாய்ப் பரிசோதனையைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் . வாயில் பாரதூரமான இழையவியல் நிலமைகளைக் கொண்ட நிலைகள் , ( OPMD ) , ஒருவரில் வாய்ப் புற்று நோய் தோன்றுவதற்கு முந்தைய நிலைகளாகக் கொள்ளப்படும் .

 ( OPMD ) இன் அறிகுறிகள்
 * தொடர்ந்து காணப்படும் வெள்ளைத் திட்டுகள் அல்லது புள்ளிகள் .
 -வாயின் உள்மேலணி இழையமானது . வெளிறியும் , திரட்சியடைந்தும் , எரிச்சலூட்டுவனவாகவும் , வாயைத் திறப்பதில் சிரமமும் காணப்படல் ,
- தொடர்ந்து காணப்படும் சிவப்பு நிறத் கலந்து காணப்படும் சிவப்பும் திட்டுகள் அல்லது புள்ளிகள் ,
- வெள்ளையும் கலந்த புள்ளிகள் அல்லது திட்டுகள் .
 - நீண்ட காலத்துக்குக் குணமடையாத வாய்ப் புண்கள் . மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் யாராவது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டால் அவரை உடனடியாகப் பல் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற அனுப்பிவைக்க வேண்டும் . 

வாய்ப் புற்றுநோய்க்குரிய அதியுயர் ஆபத்துக் காரணிகள் கொண்டவர்கள் 

* தினமும் வெற்றிலை மெல்லும் மக்கள் .
 * வெற்றிலை மெல்லுவதோடு கூடுதலாகப் புகை பிடிக்கின்ற மக்கள் .
 * வணிகத் துறைப் புகையிலை மற்றும் பாக்குப் பாவனைகளுக்கு அடிமையான மக்கள் . 

அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் , உடனடியாக பல் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் .

02 . உணவுக்குழாய் - களப் புற்றுநோய்  ESOPHAGEAL CARCINOMA
 மருத்துவ அறிகுறிகள் 
மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து உணவு விழுங்குவதில் கஷ்டம்
 மூன்று வாரங்களுக்கு மேலாக உணவு விழுங்கும் போது வலி ஏற்படல்
 . தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் . 
03 . இரைப்பைப் புற்றுநோய் GASTRIC CARCINOMA
 மருத்துவ அறிகுறிகள் 
வயிற்றின் மேற்பகுதியில் வலியும் அசௌகரியமும் ஏற்படல் . பசியின்மை . 
சில வேளைகளில் கறுப்பு நிறமாக மலம் கழித்த ல் 
, ஓங்காளம் மற்றும் வாந்தி ஏற்படல் . 
தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் . 
இரத்தச் சோகை ஏற்படல் , 
04 . பெருங்குடல் மற்றும் மலக்குடற் புற்றுநோய்  COLO RECTAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள் 
மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறல் .
 மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படல் .
 வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் கலந்த மலங்கழிக்கும் வழக்கம் . 
 மலவாசலுக்கூடான இரத்தப்போக்கு காணப்படல் . 
-மெல்லிய நூல் இழைபோல் மலம் வெளியேறல் .
 முழுமையாக மலம் வெளியேறாத உணர்வு காணப்படல் . 
வயிற்று வலி காணப்படல் .
.காரணமற்ற உடல் எடை இழத்தல் .
(பட உதவி- தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு)
உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) Gastrointestinal tract cancer (part 2) உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) Gastrointestinal tract cancer (part 2) Reviewed by Lankastudents on 3:04:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.